தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தெலங்கானா காவல்துறையை தமிழ்நாடு போலீஸ் பின்பற்ற வேண்டும்' - Telangana veterinarian rape and murder case

ஈரோடு: தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில் அம்மாநில காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையை தமிழ்நாடு காவல் துறையினரும் பின்பற்ற வேண்டும் என தமாகா நிர்வாகி யுவராஜா வலியுறுத்தியுள்ளார்.

தமக இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.யுவராஜா
தமக இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.யுவராஜா

By

Published : Dec 9, 2019, 12:14 PM IST

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் மாநிலத் தலைவர் எம். யுவராஜா ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதனைப் பின்பற்றி அதுபோன்ற கொடுமையில் ஈடுபடுவர்களை தமிழ்நாட்டு காவல் துறையினரும் கடுமையான தண்டனை வழங்கிட முன்வர வேண்டும்.

பொள்ளாச்சி சம்பவத்தில் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதிலும் காவல் துறையினர் விசாரணையை மிகவும் காலம்தாழ்த்தி நடத்தி வருவதுடன் குற்றவாளிகள் மீதான குண்டர் தண்டனையை ரத்து செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது. குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டத்தை மீண்டும் பதிவு செய்து விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்து அதில் தொடர்புடையவர்களையும் கைது செய்திட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

செய்தியாளர்களைச் சந்தித்த யுவராஜா

மேலும், ‘மத்திய அரசு வெங்காய விலை உயர்வுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசும், நியாய விலைக் கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயத்தை விநியோகிக்க தமிழ்நாடு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு காரணமாக நாட்டின் தொழில் வளர்ச்சி 4.5 சதவிகிதம் குறைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 64 சதவிகித சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் கைத்தறி, விசைத்தறி, ஜவுளிக் கடைகள், வாரச்சந்தைகள் என 58 சதவிகிதம் பாதிக்கப்பட்டு தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு வரிவிதிப்பில் உரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details