ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் போட்டியிடுகிறர். இவர் இன்று(ஏப்ரல்.03) பவானி சாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காவிலிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
”பொய்யான தகவல் பரப்புபவர்களிடம் விவாதிக்க தயார்”- அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - aiadmk candidate sengottaiyan
ஈரோடு: அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்புபவர்களிடம் விவாதிக்க தயார் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், “இங்கு அத்திக்கடவு அவினாசி திட்டம் வராது எனப் பேசியுள்ளனர். பொய்யான பரப்புரையைப் பலரும் செய்து வருகின்றனர். யாராவது அப்படிப் பேசினார்கள் என்றால் நான் நேரடியாக விவாதிக்கத் தயார். இங்குள்ள குளம் குட்டைகளில் அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் விடுபட்ட அனைத்து குளங்களும் சேர்க்கப்படும். அரசின் திட்டங்கள் வேண்டும் என்றால் அதிமுக ஆதரியுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க:"திமுக ஆட்சியில் கரோனா நிவாரண நிதி ரூ.4000 வழங்கப்படும்"- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம்