தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தேசத்தந்தை மகாத்மா காந்தி'' சிலையின் மீது காவித்துண்டு இருந்ததால் பரபரப்பு! - காவித்துண்டு அணிவித்தவர்கள் யார் என தெரியவில்லை

புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் "தேசத்தந்தை மகாத்மா காந்தி'' சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் யார் என தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"தேசத்தந்தை" மகாத்மா காந்தி சிலையின் மீது காவித்துண்டு இருந்ததால் பரபரப்பு!
"தேசத்தந்தை" மகாத்மா காந்தி சிலையின் மீது காவித்துண்டு இருந்ததால் பரபரப்பு!

By

Published : Oct 14, 2022, 5:34 PM IST

ஈரோடு:புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் "தேசத்தந்தை மகாத்மா காந்தி" சிலை அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்துடன் கூடிய அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலைக்கு காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் பல்வேறு கட்சித்தலைவர்கள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று(அக்.14) மதியம் பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டு இருந்தது. சிலையின் வலதுபுறம் தோளில் காவித்துண்டு இருப்பதைக்கண்ட அப்பகுதி கடைக்காரர்கள், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

"தேசத்தந்தை மகாத்மா காந்தி'' சிலையின் மீது காவித்துண்டு இருந்ததால் பரபரப்பு!

"தேசத்தந்தை" மகாத்மா காந்தியின் சிலைக்கு காவித்துண்டு அணிவித்தவர்கள் யார் எனத் தெரியவில்லை. இதனால் புன்செய்புளியம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!!

ABOUT THE AUTHOR

...view details