தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை வசதி செய்து தரும்வரை வாக்களிக்க மாட்டோம்: ஆவேசமடைந்த கிராம மக்கள் - election

ஈரோடு: சாலை வசதி செய்து தரும்வரை வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

ஆவேசமடைந்த கிராம மக்கள்

By

Published : Apr 17, 2019, 1:58 PM IST

Updated : Apr 17, 2019, 10:25 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூரை அடுத்த மல்லியம்மன் துர்க்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு 485 வாக்குகள் உள்ளன.

கடம்பூரில் இருந்து மல்லியம் துர்க்கம் கிராமத்துக்கு செல்ல ஏழு கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். வழிநெடுகிலும் கற்கள், முட்புதர்கள் அதிகமாக உள்ளன. சாலையின் இருபுறமும் விலங்குகள் பதுங்கி நின்று தாக்கும் அபாயமும் உள்ளது.

மலைப்பகுதியில் விளையும் காய்கறிகளை கொண்டு செல்லக்கூட பல வருடமாக இக்கிராமத்தில் அடிப்படை சாலை வசதி கிடையாது. மேலும் இது குறித்து பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மல்லியம்மன் துர்க்கம் கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இதனால் ஆவேசமடைந்த மக்கள் நாளை நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயாரான நிலையில் உள்ளபோதிலும் ஓட்டுப்போட மாட்டோம் என உறுதியாகக் கூறி தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

Last Updated : Apr 17, 2019, 10:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details