ஈரோடு: விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான மயில்கள் முகாமிட்டுள்ளன. இந்த மயில்கள் இரை தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வருவதுண்டு.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் மயில் ஒன்று வழி தெரியாமல் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
அப்போது அப்பகுதியில் இருந்த தெரு நாய்கள் மயிலை துரத்தியன. இதனால் பயந்துபோய் வேகமாக பறந்த ஆண் மயில், எதிரே உயரமான வீட்டின் பின்புற சுவரில் மோதி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் உயிரிழந்தஆண் மயிலின் உடலை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:மின்வேலி அமைக்கும் விவசாயிகள் மீது நடவடிக்கை!