ஈரோடுவளையக்கார வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கு சொந்தமான 47 சென்ட் நிலம், பெருந்துறை சாலை வீரப்பம்பாளையத்தில் உள்ளது. இந்த நிலத்தை மாணிக்க சண்முக சுந்தரம் என்ற உறவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக, செல்வராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் செல்வராஜனுக்குதான் நிலம் சொந்தம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இருப்பினும் நிலத்தை உறவினர்களிடம் இருந்து மீட்க முடியாமல், பத்து ஆண்டுகளாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், காவல்துறையினர் என புகார் அளித்து வந்துள்ளார். ஆனால், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் பத்து ஆண்டுகளாக மீட்க முடியாத நிலம் - மாவட்ட ஆட்சியர் முன்பு முதியவர் தீ குளிக்க முயற்சி! இந்நிலையில், தனக்கு சொந்தமான 47 சென்ட் நிலத்தை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணன்னுண்ணி முன்பாகவே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் செல்வராஜன் ஈடுபட்டார்.
இதனைக்கண்ட மாவட்ட ஆட்சியர், உடனடியாக முதியவரை காவல்துறையினர் மூலமாக மீட்டு அலுவலகம் உள்ளே அழைத்துச் சென்று அவரது கோரிக்கையை கேட்டறிந்தார்.
இதையும் படிங்க:கட்டுமான வீட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த கொத்தனார் - போலீசார் விசாரணை!