தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிணற்றில் விழுந்த காட்டெருமை உயிரிழப்பு! - Sathyamangalam

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியிலிருந்து வழித்தவறி வந்த ஆண் காட்டெருமை ஒன்று 120 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது.

bison

By

Published : Sep 7, 2019, 2:45 PM IST

Updated : Sep 7, 2019, 4:47 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ராமபைலூர் கிராமத்தின் வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் தனியாருக்குச் சொந்தமான 120 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. இந்தக் கிணறு விவசாய பயன்பாடு இன்றி பாழடைந்து காணப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றவர்கள் அங்குள்ள பாழங்கிணற்றிலிருந்து சத்தம் வந்ததைக்கண்டு எட்டிப்பார்த்தனர். கிணற்றிற்குள் காட்டெருமை ஒன்று தத்தளிப்பதை கண்ட அவர்கள் உடனடியாக சத்தியமங்கலம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னாட் தலைமையிலான ஊழியர்கள் கிணற்றில் சிக்கித்தவித்த காட்டெருமையை மீட்பதற்காக கிரேன் உதவியுடன் முயற்சி மேற்கொண்டனர். இதற்கிடையே அந்த காட்டெருமை உயிரிழந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப்பின் உயிரிழந்த காட்டெருமையின் உடலை வனத் துறையினர் மீட்டனர்.

கிணற்றில் விழுந்த காட்டெருமையின் உடல் மீட்பு

இதையடுத்து காட்டெருமையின் உடலை அருகே உள்ள வனப்பகுதிக்கு கொண்டுசென்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத் துறை கால்நடை மருத்துவர் அசோகன் உடற்கூறாய்வு செய்தார். இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க காட்டெருமை என்பது தெரியவந்தது. இதையடுத்து காட்டெருமையின் உடல் பறவைகள், விலங்குகளுக்கு உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.

Last Updated : Sep 7, 2019, 4:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details