தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்த 7 மதபோதகர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதையடுத்து அவர்கள் தங்கியிருந்த கொல்லம்பாளையம் வட்டாரத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படு வந்தன. இப்பகுதிகளில் வசித்த 1,500 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர்.
நான்கு பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் அச்சோதனையில் 70 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில் 66 பேர் அண்மையில் குணமடைந்து வீடு திரும்பினர். எஞ்சிய நான்கு பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களும் இன்று பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்து அனுப்பிவைத்தனர்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், ”ஈரோடு மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவினரின் சிறப்பான பணியால் அவர்கள் 70 பேரும் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற பாடுபட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
இதையும் படிங்க:கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய பொன்முடி!