தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - erode district news

ஈரோடு: பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

minister-senkottaian-press-meet-in-erode
minister-senkottaian-press-meet-in-erode

By

Published : Feb 19, 2021, 9:27 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வினோபாநகரில் அமைந்துள்ள குண்டேரிப்பள்ளம் அணை பகுதியில் ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், அணுகுசாலை அமைக்கும் பணிகளுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று (பிப்.18) பூமிபூஜையுடன் பணிகளை தொடங்கிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்," விளாங்கோம்பையில் பள்ளிகள் திறப்பில் சிரமம் உள்ளது. வனத்துறை பாதுகாப்போடு பள்ளிகள் தற்போது திறக்கப்பட உள்ளது. தேர்தலை பொறுத்தவரையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அதற்கு பிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.

தேர்தலுக்கு முன்பு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிக்கு வராத மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் தேர்வு எழுதலாம். எப்போதும் அரசு பள்ளிகளில் 98 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர். இடைநிற்றல் என்பதே தமிழ்நாட்டில் இல்லை. மாணவர்கள் சேர்க்கை கூடுதலாக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிப் 25ஆம் தேதி முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம் - தேமுதிக

ABOUT THE AUTHOR

...view details