தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2 கைதிகள் தப்பியோட்டம்: அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்த உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்..! - கண்காணிப்பாளர் உத்தரவு

2 Prisoners escape: கோபிசெட்டிபாளையத்தில் கைதிகள் தப்பியோடியதையடுத்து, கைதிகளின் காவலில் சரியாகப் பணி புரியாத நான்கு காவலர்களை ஆயுதப் படைக்கு பணியிடை மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்த உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்
அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்த உத்தரவிட்ட காவல் கண்காணிப்பாளர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 11:03 PM IST

ஈரோடு: கடந்த டிசம்பர் 30ம் தேதி உண்டியல் கொள்ளை வழக்கில் திருப்பூர் மாவட்டம் சாந்திபாளையம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் சேது, அஜித் மற்றும் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகரைச் சேர்ந்த பரணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று(ஜன.6) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சேது, அஜித் மற்றும் பரணி ஆகியோர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு, சிறுவலூர் காவல் நிலைய பகுதியில் நடைபெற்ற கோயில் உண்டியல் கொள்ளை வழக்கு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைக்குப் பின்னர், இவர்கள் மூவரையும் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2ல் மாஜிஸ்திரேட் தமிழரசு முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதற்குப்பின்னர், மீண்டும் கோபியில் உள்ள மாவட்ட சிறைக்கு இவர்கள் மூவரையும் காவல்துறையினர் கொண்டு செல்ல முயன்ற போது, நீதிமன்ற வளாகத்திலிருந்து சேதுவும், அஜித்தும் போலீசார் பிடியிலிருந்து ஆளுக்கொருபுறம் தப்பியோடினர். தப்பியோடிய குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இந்நிலையில் கைதிகளின் தப்பியோட்டம் குறித்து துறை ரீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் விசாரணை கைதிகள் இருவருக்கும் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட சிறுவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்கென்னடி, பெண் காவலர் கீதாமணி, முதல்நிலை காவலர்கள் அருண்ராஜ் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் கைதி வழி காவலில் சரியாகப் பணி புரியாததாக ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், பணியின் போது இருந்த அந்த 4காவல் அதிகாரிகளையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:"பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் கிடைத்தால் அனைத்திலும் சுதந்திரம் கிடைக்கும்" - தமிழிசை..!

ABOUT THE AUTHOR

...view details