தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பவானி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றவர் உயிருடன் மீட்பு! - சத்தியமங்கலம் பாவானி ஆறு

ஈரோடு: சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நீரில் குதித்து தற்கொலைக்கு முயன்றவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

ஆற்றில் குதித்தவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்
ஆற்றில் குதித்தவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

By

Published : Jan 7, 2020, 2:49 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பவானி ஆற்றுப்பாலத்திலிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஒரு நபர் ஆற்றில் குதித்துள்ளார்.

இதனைக்கண்ட பொதுமக்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், பவானி ஆற்றில் இறங்கி 50 மீட்டர் தொலைவில், ஆற்றில் மிதந்துகிடந்த நபரை சிறு காயங்களுடன் மீட்டனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர், ஆற்றில் குதித்தவரிடம் விசாரித்தபோது, அவர் கோபி அருகே உள்ள பெரியகரப்பபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணி என்பது தெரியவந்தது.

ஆற்றில் குதித்தவரை மீட்ட தீயணைப்புத் துறையினர்

குடும்பப் பிரச்னை காரணமாக ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாகத் தெரிவித்துள்ளார். பின்னர், அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடந்த இரண்டு மாதங்களில், சத்தியமங்கலம் பவானி ஆற்றுப்பாலத்தில் இதுவரை மூன்று பேர் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் இரண்டு பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பவானி கூடுதுறை ஆற்றில் குதித்த பெண் மீட்பு!

ABOUT THE AUTHOR

...view details