ஈரோடு:பேருந்து நிலையத்திலிருந்து சிவகிரி, முத்தூர், மூலனூர், வெள்ளகோவில் உள்ளிட்ட வழிதடங்களில் 50-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இநிலையில் இந்த தனியார் பேருந்துகளில் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ஈரோட்டில் இருந்து சிவகிரிக்கு 18 ரூபாயும், முத்தூருக்கு 26 ரூபாயும், வெள்ளகோவிலுக்கு 31 ரூபாயும், மூலனூருக்கு 45 ரூபாயும் தமிழக அரசு தனியார் பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக பொதுமக்களிடம் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்தது.
ஈரோட்டில் இருந்து சிவகிரிக்கு 18 ரூபாய்க்கு பதிலாக 20 ரூபாயும், முத்தூருக்கு 26 ரூபாய்க்கு பதிலாக 30 ரூபாயும் வெள்ளகோவிலுக்கு 31 ரூபாய்க்கு பதிலாக 35 ரூபாயும், மூலநூறுக்கு 45 ரூபாய்க்கு பதிலாக 48 ரூபாயும் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின்படி ஈரோடு பேருந்து நிலையத்தில் செய்தியாளர்கள் கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற போது பேருந்து நடத்துனர்கள், சோதனை செய்தால் கண்டுபிடிக்க முடியாத படி பயணச்சீட்டு இயந்திரத்தில் உள்ள தகவல்களை அழிக்க பல மணி நேரம் போராடிய காட்சிகளை வெளியாகியுள்ளன.