ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, ராஜன்நகர், பவானிசாகர், இக்கரை தத்தப்பள்ளி, தாண்டாம்பாளையம், கெஞ்சனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ பயிரிடப்பட்டுள்ளது.
இங்கு விளையும் மல்லிகைப்பூக்கள் விற்பனைக்காக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி ஏலம் எடுக்கும் பூக்களை வியாபாரிகள் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாடு நகரங்களுக்கும் மைசூரு, பெங்களுரு, ஹைதராபாத், கொச்சின், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாநில நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புகின்றனர்.