தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பண்ணாரியம்மன் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு

ஈரோடு: பண்ணாரியில் உள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பாதுகாப்புப் படையினர் நேற்று ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாரியம்மன் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு

By

Published : May 5, 2019, 4:33 AM IST

ஈரோடு மாவட்டம், பண்ணாரி பகுதியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். ஆனால் இந்த கோயிலில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையென்றும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மாரியம்மன் கோயிலில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு

கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்த சிறப்பு பாதுகாப்பு படையை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நேற்று கோயிலுக்கு வந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details