ஈரோடு:கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் செப். 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்கள் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப்பரவல் குறைந்துள்ள நிலையில், பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வரும் செப்.1.ஆம் தேதி முதல், பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதல் தவணை தடுப்பூசி கட்டாயம்
அதன் ஒருபகுதியாக ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. தடுப்பூசி போடாதவர்களைப் பள்ளி, கல்லூரிகளுக்குள் அனுமதிக்க கூடாது என்றும் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.