சென்னிமலை கருங்கவுண்டன் வலசு காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (72). இவர் தனது வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவரது மகன் சிவானந்தம் அருகில் உள்ள வீட்டில் வசித்துவருகிறார்.
இந்நிலையில், நேற்றிரவு பழனிச்சாமி தனது மனைவியிடம் சாப்பாடு சரியில்லை என்ற காரணத்தினால் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், குடித்துவிட்டு அருகில் இருக்கும் தனது மகன் வீட்டிற்குச் சென்று தகாத சொற்களால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த மகன் அருகில் கிடந்த தேங்காய் உரிக்கும் கம்பியால் தாக்கியதில், பழனிச்சாமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.