தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏடிஎம்மில் ஸ்கிம்மர் கருவி பொருத்தம்: சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை - skimmer tool investigation

ஈரோடு: பெருந்துறையில் உள்ள ஏடிஎம் எந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

skimmer-tool-fit-in-atm
skimmer-tool-fit-in-atm

By

Published : Jun 19, 2020, 7:07 AM IST

ஈரோடு மாவட்டம் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரதீப்குமார். அவர் ஜூன் 17ஆம் தேதி பணம் எடுப்பதற்காகப் பெருந்துறையில் உள்ள ஏடிஎம் ஒன்றிற்குச் சென்றார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் உள்ள எண்களை அழுத்துமிடத்தில் சந்தேகத்திற்கிடமாக சிவப்பு நிற ஒளி மின்னியுள்ளது.

அதனைச் சோதனையிட்ட அவர், எலக்ட்ரானிக் சிப் போன்ற ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து அவர் உடனே இது தொடர்பாகக் காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.

அந்தத் தகவலையடுத்து அங்கு விரைந்த பெருந்துறை காவல் துறையினர், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரை வரவழைத்து எலக்ட்ரானிக் சிப்பை கைப்பற்றி சோதனையிட்டனர்.

அந்தச் சோதனையில் அந்த சிப் ஏ.டி.எம். அட்டைகளின் தகவல்களைத் திருடப் பயன்படுத்தும் ஸ்கிம்மர் கருவி என்பது தெரியவந்தது. அதையடுத்து காவல் துறையினர் ஏடிஎம்மின் சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி: அபாய சங்கு ஒலித்ததால் திருடர்கள் தப்பியோட்டம்!

ABOUT THE AUTHOR

...view details