பீகார் மாநிலம், கைமூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு இளைஞர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் சோப் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய கடந்த வாரம் வந்துள்ளனர்.
கொத்தடிமைகளாக வைக்கப்பட்ட 7 பீகார் இளைஞர்கள் மீட்பு - ஈரோடு
ஈரோடு: தனியார் சோப் நிறுவனம் ஒன்றில் கொத்தடிமைகளாக பிணையில் வைக்கப்பட்ட ஏழு பீகார் இளைஞர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
yotuhj
ஆனால், அந்த இளைஞர்களின் செல்ஃபோன்களை பிடுங்கி, கொத்தடிமைகளாக வைத்து அந்நிறுவனம் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதிலிருந்து சூரஜ் சவுஹான் என்ற இளைஞர் தப்பியோடி, கைமூர் மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்துடன் புகார் அளித்துள்ளார். இதனிடையே, மேலும் இரண்டு இளைஞர்களும் தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து, ஈரோடு மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு கொத்தடிமைகளாக இருந்த மற்ற இளைஞர்களும் மீட்கப்பட்டனர்.