தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த செங்கோட்டையன்! - நலத்திட்ட உதவிகளை செய்த செங்கோட்டையன்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான மேம்பாட்டுப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

school-education-minister-sengottaiyan-launched-welfare-works
school-education-minister-sengottaiyan-launched-welfare-works

By

Published : Nov 30, 2019, 9:29 AM IST

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெட்டிச்செவியூர் பகுதியில் 10 இடங்களில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுபணிகளின் பூமிபூஜையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து 2 இடங்களில் புதுப்பிக்கப்பட்ட சாலைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். அதையடுத்து தாழ்குனி ஊராட்சியில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன்

ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்தப்பகுதி பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர்களுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதையும் படிங்க: ’பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்க பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும்’ - அமைச்சர் செங்கோட்டையன்

ABOUT THE AUTHOR

...view details