சத்தியமங்கலம் அடுத்த உதயமரத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் யாழினி(15). இவர் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 1இல் சேர்ந்து படிக்க விரும்பியுள்ளார். பெற்றொருக்கு போதிய வசதியில்லாத காரணத்தால் வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
பிளஸ் 1 சேரமுடியாத விரக்தியில் மாணவி தற்கொலை! - பள்ளி மாணவி தற்கொலை
ஈரோடு : சத்தியமங்கலம் உதயமரத்துமேட்டில் பிளஸ் 1 சேரமுடியாததால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்து காணப்பட்ட யாழினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காற்றாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகள் தற்கொலை செய்துகொண்டதைப் பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.