தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்தியமங்கலம் நகராட்சி தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் - ஆர்வம் காட்டாத அரசியல் கட்சிகள் - Sathiyamangalam urban local body election

சத்தியமங்கலம் நகராட்சியில் சிசிடிவி மூலம் தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகள் வார்டு ஒதுக்கீடு உடன்பாடு எட்டபடாதததால் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.

சத்தியமங்கலம் நகராட்சியில்  சிசிடிவி மூலம்  தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு
சத்தியமங்கலம் நகராட்சியில் சிசிடிவி மூலம் தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு

By

Published : Jan 29, 2022, 10:27 AM IST

ஈரோடு:தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி மற்றும் 42 பேரூராட்சிகள் வேட்பு மனு பெறுவதற்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தயார் நிலையிலிருந்தனர்.

தேர்தல் நடத்தை விதி மற்றும் கொரானா தடுப்பு விதிகளிடம் படி வேட்புமனு விண்ணப்பங்கள் பெற விரும்புவோர் அலுவலகத்துக்குள் வரும்போது உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினியால் கைகள் சுத்தம் செய்யப்பட்டு முகக்கசவம் அணிந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.

சத்தியமங்கலம் நகராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என நகராட்சி ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் தனிக்குழுவினர் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் பகுதியில் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் கூட்டணிக் கட்சிகளிடையே வார்டு ஒதுக்கீடு உடன்பாடு ஏற்படாததால் அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. டெபாசிட் அதிகப்படுத்தியதால் சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

மாவட்ட முழுவதும் இதே நிலை தான் உள்ளது.தற்போது வேட்புமனு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதால் அதனை வாங்க அரசியல்கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:மருத்துவப் படிப்பை தன்வசமாக்கிய ஏழை மாற்றுத்திறனாளி மாணவி

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details