தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈரோட்டில் விவசாயியிடம் லஞ்சம் கேட்ட வேளாண்மை அதிகாரி சஸ்பண்ட்! - agriculture official suspended

Erode news: காட்டு யானைள் சேதப்படுத்திய பயிருக்கு இழப்பீடு பெற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வேளாண் துறை அதிகாரியை, வேளாண் துறை இயக்குநர் சஸ்பண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 9:38 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைக் கிராமங்களில் உள்ள விவசாயிகள் கரும்பு, மக்காச்சோளம், ராகி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதம் செய்வது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கடம்பூர் அடுத்த குன்றி மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை காட்டு யானைகள் நாசம் செய்ததாக, சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு பெற சான்றிதழ் கேட்டு, சத்தியமங்கலம் வேளாண்மைத் துறை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

ஆனால், பயிர் சேத சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம், வேளாண் துறை உதவி இயக்குநர் வேலுச்சாமி என்பவர் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், அது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், அலுவலக செலவுக்காக 2 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் எனவும், இழப்பீட்டுத் தொகை 22 ஆயிரம் என்பதை 24 ஆயிரமாக உயர்த்தி தருவதாகவும் வேளாண்துறை அதிகாரி பேசியிருந்தார்.

மேலும், சேதமடைந்த பயிருக்கு இழப்பீடு பெற சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த விவசாயியிடம், லஞ்சம் கேட்ட அரசு அதிகாரியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன. மேலும், அச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விவசாயியிடம் பயிர் இழப்பீடு சான்றிதழ் வழங்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வேளாண் துறை அதிகாரி குறித்து, சென்னை வேளாண்துறை ஆணையர் எல்.சுப்பிரமணியம் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு, லஞ்சம் கேட்ட வேளாண் உதவி இயக்குநர் வேலுச்சாமியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:3 மாநிலங்களின் முதல்வர்கள் இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பு.. ராஜஸ்தானில் முக்கிய கூட்டம்!

ABOUT THE AUTHOR

...view details