நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போது மூன்றடி தகுந்த இடைவெளி விட்டு வாடிக்கையாளர்களுக்குப் பொருள்கள் வழங்க வேண்டும் என வியாபாரிகளுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில் தனிநபர் இடைவெளி இல்லாமல் மீன் விற்பனை நடந்துள்ளது. மீன்கள் விற்பனை செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு விதியை மீறி இங்கு மீன்களைச் சுத்தம் செய்துகொடுத்தனர்.
மீன் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு! இது குறித்து கோபிசெட்டிபாளையம் மீன் வியாபாரிகளை எச்சரித்த காவல் துறையினர், தொடர்ந்து தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த உரிமையாளர்கள், வியாபாரிகள் பத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீன்கள் வாங்க வந்த பொதுமக்களையும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தி எச்சரித்தனர்.
இதையும் பார்க்க: லோக்பால் உறுப்பினர் கரோனாவால் உயிரிழப்பு!