தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறைச்சி வியாபாரத்தைப் புரட்டிப் போட்ட புரட்டாசி! - புரட்டி போட்ட புரட்டாசி

ஈரோடு : புரட்டாசி மாதம் தொடங்கியதால் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மீன், சிக்கன், மட்டன் உள்ளிட்ட இறைச்சிக்கடைகளில் விற்பனை குறைந்தது.

sathy fish sale dull

By

Published : Sep 23, 2019, 12:26 PM IST

இந்துக் கடவுளான பெருமாளை நினைத்து, பெரும்பாலான இந்து மக்கள் புரட்டாசி மாதம் விரதம் இருக்கின்றனர். குறிப்பாக, இந்த மாதம் முழுவதும் இறைச்சி உண்பதைத் தவிர்த்து சைவ உணவு மட்டுமே உண்பது வழக்கம். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புரட்டாசி மாதம் பலர் இறைச்சி உண்பதில்லை என்பதால், அதன்காரணமாக சத்தியமங்கலம், பவானிசாகர் , புஞ்சைபுளியம்பட்டிப் பகுதிகளில் உள்ள ஆட்டிறைச்சி, கோழி, மீன் விற்பனைக் கடைகளில் இன்று வியாபாரம் படுமந்தமாக இருந்தது.

புரட்டாசி மாதம் தொடங்கியதால் இறைச்சிக்கடைகளில் விற்பனை குறைந்தது

பவானிசாகர் அணையில் பிடிக்கப்படும் மீன்கள் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகத்தின் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த மீன்களை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி செல்வர். இந்நிலையில் மீன் விற்பனை நிலையத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் மீன் விற்பனை நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் இறைச்சி கடைகளிலும் வியாபாரம் குறைந்தது. இம்மாதம் முழுவதும் இறைச்சி விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் இறைச்சி வியாபாரிகள் வருமான இழப்பு ஏற்படும் என வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

வரப்போகுது புரட்டாசி மாதம்: கறிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்!

ABOUT THE AUTHOR

...view details