ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதை சாலையோரங்களில், ஏராளமான குரங்குகள் வாழ்ந்துவருகின்றன. குறிப்பாக நீண்டவால், கரிய முகத்துடன் இருக்கும் கருமந்திக்குரங்குகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
காட்டில் விளையும் பழங்களை மட்டுமே சாப்பிட்டுவந்த இந்த வகை குரங்குகள் நாளடைவில் அவ்வழியே செல்லும் பயணிகள் தரும் உணவு உண்பதையே வழக்கமாக மாற்றிக்கொண்டன. இதனால் பெரும்பாலான குரங்குகள் காட்டை விட்டு வெளியே வந்து திம்பம் சாலையோர தடுப்புச்சுவர்களில் தங்கத் தொடங்கின.
உணவு வேட்டைக்குச் செல்லாமல் வனப்பகுதியை ஒட்டிய திம்பம் மலைப்பாதை சாலை ஓரங்களில் சுற்றுலாப் பயணிகள் தரும் தின்பண்டங்களுக்காகவே அமர்ந்திருக்கும் பழக்கத்திற்கு மாறியிருந்த குரங்குகளுக்கு தற்போது தின்பண்டங்கள் கிடைக்க வழியின்றிப் போனது.
கரோனா ஊரடங்கின் காரணமாக தமிழ்நாடு - கர்நாடக இடையே செல்லும் பயணிகள் வாகனங்கள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும், அனைத்துவிதமான சுற்றுலாத் தலங்கள், மலைப்பாதைகளுக்கும் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் வருகை இல்லாததால், திம்பம் மலைப்பாதையில் வாழும் குரங்குகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், குரங்குகளுக்கு போதிய நீர், உணவுக் கிடைக்காத குரங்குகள் இயற்கையான உணவுக்குத் திரும்பியுள்ளன.
இயற்கை உணவுகளுக்கு மாறியுள்ள சத்தியமங்கலம் கருமந்திக்குரங்குகள்! இதற்கிடையே ஒரு சில வாகன ஓட்டிகள் குரங்குகளுக்கு உணவு அளித்ததைக் கண்ட வனத் துறையினர், குரங்குகளுக்கு பொரித்த உணவுகளைத் தர வேண்டாம் என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க :ஆராவாரமின்றி சாலைகளில் உலாவும் யானை