தமிழ்நாட்டில் வீடுகள், வியாபார நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகப் பிரித்தெடுத்து அவற்றை உரங்களாக்கும் பணியில் ஈடுபடுவதற்காக மாநிலம் முழுவதும் கிராம ஊராட்சிகளில் தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும், கரோனா காலத்தில் துப்புரவு பணிகளையும் மேற்கொண்டனர்.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதுமுள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, குப்பைகளை உரங்களாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள 400க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆயிரத்து 961 தூய்மைக் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூசி சங்கத்தின் சார்பில் தூய்மை காவலர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.