ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மைசூரு சாலையில் உள்ள வனத்துறை சோதனைசாவடி அருகே தேர்தல் பறக்கும்படை அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.8 லட்சம் பறிமுதல் - ரூ.1.80லட்சம் பறிமுதல்
ஈரோடு: சத்தியமங்கலத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கைப்பற்றினர்.
அப்போது அந்த வழியே வந்த கார் ஒன்றை வழிமறித்து சோதனை செய்த போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 55 ஆயிரம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் பணத்தை எடுத்த சென்றவர் பெயர் செல்வராஜ் என்பதும், சொந்த தேவைக்காக வங்கியில் இருந்து எடுத்து சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து பறிமுதல் செய்த பணத்தை மாவட்ட கரூவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் உள்ள கொமராபாளையம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட அலுவலர்கள் வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.25 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.