ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி அலுவலகத்தில் இந்தியன் வங்கி மூலம் கரோனா நிவாரண சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ், கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், ஆட்சியர் கதிரவன், காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மகளிர் தங்கள் குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியன் வங்கி சார்பில் கரோனா சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ், 21 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 252 பெண்களுக்கு ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள கடன் உதவி வழங்கப்பட்டது.
மகளிர் குழுவினருக்கு ரூ.22 லட்சம் கடன் உதவி - தொடங்கி வைத்த அமைச்சர்
ஈரோடு: கரோனா நிவாரண சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ், 22 மகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூபாய் 22 லட்சம் கடனுதவிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி. கருப்பணன் வழங்கினார்.
அமைச்சர் கே. சி. கருப்பணன் கடன் உதவி வழங்கும் காட்சி
இதனைப் பெற்ற பெண்கள் ஆறு மாதம் கழித்து வட்டியில்லாமல், அசல் தொகையை மட்டும் மாதத் தவணையாக செலுத்தினால் போதும் என வங்கி மேலாளர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பேருந்துகளை இயக்கத் தயார் - தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம்