தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், காய்கறிச்சந்தை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சிப் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை அறிவிப்பு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இடைவெளிவிட்டு நிற்குமாறும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சோப்பு போட்டு கை கழுவுதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி நோய்ப்பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
மேலும், முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவித்துவருவதோடு நடமாடும் வாகனத்திலும் அறிவிப்பு செய்துவருகின்றனர். இதன் அடிப்படையில், இன்று (ஏப்ரல் 24) முகக்கவசம் அணியாத 50 நபர்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதையும் படிங்க:'4 லட்சம் தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக அனுப்ப நடவடிக்கை'