தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளியைக் கொண்டாட மகள் வீட்டிற்குச் சென்ற நேரத்தில் 41 சவரன் நகைகள் கொள்ளை! - GOBICHETTIPALAYAM

கோபிசெட்டிபாளையம் சகுந்தலா செங்கோட்டையன் லே-அவுட் பகுதியில் பிரபல மருத்துவர் ரவீந்தரன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 41 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைரேகை நிபுணர்கள் சோதனை
கைரேகை நிபுணர்கள் சோதனை

By

Published : Nov 5, 2021, 5:52 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த சகுந்தலா செங்கோட்டையன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர், பிரபல மருத்துவர் ரவீந்தரன்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த 3ஆம் தேதி கோவையில் உள்ள மகள் பவித்ரா வீட்டிற்கு மனைவி கீதா, உறவினர் வள்ளியம்மாள் ஆகியோருடன் சென்று விட்டு இன்று (நவ.5) வீடு திரும்பியுள்ளனர்.

கொள்ளைபோனது எவ்வளவு தெரியுமா?

வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது ஐந்து பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 16 லட்சம் மதிப்புள்ள 41 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

கைரேகை நிபுணர்கள்

கொள்ளைச் சம்பவம் குறித்து மருத்துவர் ரவீந்தரன் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையினர் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவைக் கலக்கும் இருளர்கள் - ஆச்சரியமளிக்கும் இரட்டையர்

ABOUT THE AUTHOR

...view details