தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேமராவுக்கு ஸ்பிரே அடித்து கொள்ளை முயற்சி! - சியூபி ஏடிஎம்மில் இருந்த பல லட்ச ரூபாய் தப்பியது - ஏடிஎம்

ஈரோட்டில் ஏடிஎம் இல் மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமராவிற்கு ஸ்பிரே அடித்து மறைத்து விட்டு கொள்ளையடிக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிசிடிவி கேமராவுக்கு ஸ்பிரே அடித்து ஏடிஎம் இல் கொள்ளையடிக்க முயன்ற திருடன்
சிசிடிவி கேமராவுக்கு ஸ்பிரே அடித்து ஏடிஎம் இல் கொள்ளையடிக்க முயன்ற திருடன்

By

Published : Oct 22, 2022, 4:33 PM IST

ஈரோடு: சென்னிமலை அருகே உள்ள மயிலாடியில், தனியார் கல்லூரி முன்பு இருந்த சிட்டி யூனியன் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

நள்ளிரவில் ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த மூன்று சிசிடிவி கேமராக்களுக்கு அடுத்தடுத்து ஸ்பிரே மூலம் கருப்பு மை பூசி மறைத்து விட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இயந்திரத்தை உடைக்க முயன்ற போது, ஏடிஎம் இல் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால், பயந்த அந்த கொள்ளையடிக்க வந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனால் ஏடிஎம்.ல் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது. இதனையடுத்து வங்கி கட்டுபாட்டு அறைக்கு சென்ற தகவலை தொடர்ந்து, வங்கி அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளை முயற்சி குறித்து சென்னிமலை காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுனர்கள் மூலம் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி கேமராவுக்கு ஸ்பிரே அடித்து ஏடிஎம் இல் கொள்ளையடிக்க முயன்ற திருடன்

இதையும் படிங்க:சிசிடிவி: அன்னூர் பேருந்து நிலையத்தில் பயணியிடம் செல்போன் பறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details