தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு : 2 கிராம மக்கள் அவதி - vilankombai

ஈரோடு : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி, மல்லியம்மன்துர்க்கம் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் விளாங்கோம்பை, கம்பனூர் கிராமங்களிடையே பயணிக்கும் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

road damage
road damage

By

Published : Nov 2, 2020, 9:29 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை அடர்ந்த வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. 42 அடி உயரம் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு மல்லியம்மன்துர்க்கம், கடம்பூர், குன்றி மற்றும் விளாங்கோம்பை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர், காட்டாறுகள் வழியாக வந்தடைகிறது.

இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குண்டேரிப்பள்ளம் அணைக்கு மேல் பகுதிகளில் அமைந்துள்ள குன்றி, மல்லியம்மன்துர்க்கம் பகுதியில் பெய்த மழைநீர், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் பள்ளத்தில் பாய்ந்தோடியது. தற்போது பெய்த கனமழையினால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குண்டேரிப்பள்ளம் அணை நான்கு மணிநேரத்தில் இரண்டு அடிகள் உயர்ந்து, 32 அடியாக இருந்த நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

இந்தப் பள்ளத்தை போக்குவரத்துப் பாதையாக பயன்படுத்தி வந்த நிலையில், விளாங்கோம்பை மற்றும் கம்பனூர் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் மருத்துவம் மற்றும் அந்தியாவசியத் தேவைக்கு கிராமங்களை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வெள்ளப்பெருக்கு காரணமாக இரு கிராமங்களிடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு கிராமங்களுக்கும் சாலை மற்றும் காட்டாறுகளில் மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எந்த அரசும் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரவில்லை: அதிமுக நிர்வாகி குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details