தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு! - Bhavanisakar Legislature Vol

ஈரோடு: தமிழ்நாட்டில் நாளை (ஏப். 6) காலை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில், காவலர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு
தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் அதிரடிப்படையினர் பாதுகாப்பு

By

Published : Apr 5, 2021, 11:09 PM IST

தமிழ்நாட்டில் நாளை (ஏப். 6) காலை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு-கர்நாடக எல்லையான பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில், மாநில எல்லையில் 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் நாளை காலை 7 மணிக்கு தேர்தல் தொடங்குவதால், கர்நாடக மாநில எல்லையில் காவலர்கள் குவிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்திற்கு வரும் வாகனங்களின் பதிவு எண்களை பதிவுசெய்து, ஆய்வுக்குப் பின் அனுப்பப்படுகிறது. தாளவாடி பகுதியில் 68 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மாநில எல்லையில் உள்ள திகினாரை, அருள்வாடி, தாளவாடி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்பதால், வாக்குச்சாவடிக்கு காவலர்கள் பாதுகாப்பு போட்டப்படுள்ளன.

கர்நாடக அரசுப்பேருந்து மற்றும் தனியார் பேருந்துகள் சோதனைக்குள்படுத்தப்பட்ட பிறகு அனுப்பி வைக்கப்படுகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகளின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு, வெளியூர் நபராக இருப்பின் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இதையும் படிங்க: 'பாதுகாப்பு படை வீரரை கடத்திய மாவோயிஸ்ட்? உண்மை என்ன?'

ABOUT THE AUTHOR

...view details