ஈரோடு: சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் பிரசித்திபெற்ற பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோயிலுக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கிராம மக்கள் தரிசனம் செய்வது வருவது வழக்கம்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பவானீஸ்வரர் கோயிலின் தெற்கு பிரகார மதில் சுவர் இடிந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து பிரகார சுவரும் இடிந்து சேதமடைந்தது. இதில் 63 நாயன்மார்கள் சிலைகளும் சேதமடைந்தன.
சேதமடைந்த பவானீஸ்வரர் கோயில்
இதன் காரணமாக கோயிலில் மேற்கூரை வலுவிழந்தது. இதைத்தொடர்ந்து கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. தற்போது தற்காலிகமாக ஒரு சிறிய அறையில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.