ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் விவசாயிகள் மானாவாரி சாகுபடியோடு அதிகளவில் கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகிறது.
சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை - leopard
ஈரோடு: குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க தாளவாடி கிராம மக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி மாதள்ளி நாயக்கர் என்பவர் தோட்டத்தில் உழவு பணியில் ஈட்டுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று அவரது மாட்டுக்கொட்டகைக்கு சென்றதை பார்த்து கூச்சலிட்டார். கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுத்தையை விரட்டினர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அலுவலர்கள் சிறுத்தை நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாடுவதால், அதனைக் கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத்துறை அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.