ஈரோடு, சத்தியமங்கலம் அருகே உள்ள தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் ஆகிய இரு கிராமங்களும் மாயாற்றிக்கு அக்கறையில் உள்ளதால், அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் டவுன் பகுதிக்கு வர பரிசல் போக்குவரத்தை மட்டுமே நம்பியுள்ளனர்.
மாயாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க கிராம மக்கள் கோரிக்கை! - சத்தியமங்கலம்
ஈரோடு : தெங்குமரஹாடா கிராமத்தில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் மாயாற்றை கடக்க உயர்மட்ட பாலம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து வந்த கனமழையால், மயாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் முடங்கியுள்ளனர். அவசர தேவைகளுக்கு கூட கிராமத்தை விட்டு வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து தற்போது மழை குறைந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால், அரசு அலுவலர்கள் தலைமையில் தெங்குமரஹாடா கிராமத்தில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. அப்போது மாயாற்றை கடந்து டவுன் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளதால், மழை நேரங்களில் ஆற்றை கடக்க சிரமம் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்தனர். மேலும் இது தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.