பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் இருகரைகளை தொட்டபடி இந்த தண்ணீர் பாய்ந்தோடுகிறது.
சத்தியமங்கலம் அருகே தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் பகுதியில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆபத்தை உணராமல் தண்ணீரில் இறங்கி குளிக்கின்றனர். ஆழமான பகுதி என்பதால் பொதுப்பணித்துறையினர் குளிப்பதற்கு தடை விதித்துள்ள நிலையில் பண்டிகை காரணமாக விடப்பட்ட தொடர் விடுமுறையில் பொதுமக்கள் விதிகளை மீறி குளித்து மகிழ்வதோடு, கரையோரம் செல்பியும் எடுத்துவருகின்றனர்.