தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - அண்மை செய்திகள்

கடந்த ஒரு மாதமாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கோரி அப்பகுதி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் பூதமடைப்புதூர் பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

By

Published : Apr 20, 2021, 12:22 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பூதிமடைப்புதூர் ஊராட்சி பகுதியில் பெருந்துறை தாலுகாவிற்கு கொண்டு செல்லும் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனால், பூதிமடைப்புதூர் ஊராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பூதிமடைப்புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக்கோரியும் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சத்தியமங்கலம் - கொளப்பலூர் சாலையில் பூதிமடைப்புதூர் பிரிவில் காலி குடங்களுடன் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நம்பியூர் காவல் துறை மற்றும் கோபிசெட்டிபாளையம் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பழதடைந்த குழாய்கள் விரைவில் சரி செய்யப்பட்டு என கூறி போராட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் - கொளப்பலூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பெண்ணை சீண்டிய மதபோதகர் கைது

ABOUT THE AUTHOR

...view details