ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட சூரம்பட்டி பகுதியில் உள்ள பாரதிபுரம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அத்தியாவசியப் பொருள்கள்கூட கிடைக்காமல் தவித்து வந்த அப்பகுதி மக்கள், தடுப்பு வேலியின் முன்பு இன்று (ஜூன்.02) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு: சூரம்பட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின்றி தவித்து வருவதாகவும், இதற்கு மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அத்தியாவசியப் பொருள்கள் தங்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.