தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போரட்டம்

ஈரோடு: கொடிவேரி தடுப்பணையில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ராட்சத கிணறு தோண்டுவதை கண்டித்து கொடிவேரி ஊர் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

File pic

By

Published : Jun 19, 2019, 7:50 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை மைசூர் மன்னரால் பவானி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்பட்டது. இந்த அணையின் மூலம் கோபிசெட்டிபாளையம் அந்தியூர் பவானி ஆகிய இடங்களில் உள்ள விவாசய நிலங்கள் பயன் பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அணையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நீரேற்று நிலையம் அமைக்க பெரிய அளவிலான கிணறு தோண்டப்பட்டுவருகிறது.

கொடிவேரி அணையின் மேற்பகுதியிலும் அணையின் கீழ் பகுதியிலும் சாதகமான இடங்கள் எவ்வளவோ இருந்தும் அணையின் உட்பகுதியில் பெரிய அளவில் கிணறு தோண்டப்பட்டுவருகிறது.

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு

ரூ.224 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்போது கொடிவேரி அணையை ஆதாரமாக கொண்டுள்ள வேளாண் விளைநிலங்கள் போதுமான நீரின்றி பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள் அணையில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப் பணிகளை நிறுத்தக்கோரி மாபெரும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொதுப்பணித் துறையினர், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களின் கேரிக்கை பரிசீலனை செய்து முடிவெடிக்கும் வரை பணிகள் தொடராது என அலுவலர்கள் உறுதி கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details