ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் இன்று (செப் 10) வரை காலக்கெடு அளிக்கப்பட்டது.
புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு - Erode sathyamangalam
ஈரோடு: சத்தியமங்கலத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆட்சிரியரின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க அலுவலர்கள், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதை கண்டித்த அப்பகுதி பொதுமக்கள், கடையை திறக்க விடாமல் காவல்துறையினர், டாஸ்மாக் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சூழ்நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுப்பிரியர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டதால் 50க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் முகாமிட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பினர். டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், கடையை திறக்கக்கூடாது என்று மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், ஆட்சிரியரின் உத்தரவு படி நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் தெரிவித்தனர்.