ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி சாலை வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. புதுவட வள்ளிலிருந்து பண்ணாரி கோயில் வரையிலான அடர்ந்த காட்டுப் பகுதியில், மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் செல்வதற்காக சிறு பாலங்கள் மட்டுமே நீர்வழிப் போக்கில் உள்ளன. ஆனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது சாலைகளில் மழை வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து வனத்தில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் எளிதாக செல்வதற்கு ஏதுவாக அதிக உயரம் கொண்ட மூன்று உயர்மட்ட பாலங்கள் ரூ.8.66 கோடி செலவில் அமைக்கும் பணி நடந்துவருகிறது. குரங்கு பள்ளம், குய்யனூர் பள்ளம், பண்ணாரி பள்ளம் என மூன்று பள்ளங்களில் குறுக்கே இந்த உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்றுவருகிறது.