ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (47). இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்திரசேகரன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோபிச்செட்டிப்பாளையம் கரோனா சிகிச்சை மையத்தில் அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தொடர்ந்து ஈரோடு பெருந்துறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.