17ஆவது மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை செய்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியில் வசிக்கும் தினேஷ் என்பவரின் மனைவி லட்சுமி பிரியாவிற்கு அவர்களது பெற்றோர் இன்று வளைகாப்பு விழா நடத்தினர்.
வளைகாப்பு முடிந்த கையோடு வாக்களித்த கர்ப்பிணி...!
ஈரோடு: வளைகாப்பு முடிந்த கையோடு கர்ப்பிணி கோபிசெட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விழா முடிந்தவுடன் தாய் வீடு அழைத்துச்செல்ல உறவினர்கள் மற்றும் பெற்றோர் காத்திருக்கையில் தனது வாக்கைப்பதிவு செய்த பின்னர் தாய் வீடான ஈரோடு கருங்கல்பாளையம் செல்வேன் என்று கர்ப்பிணி கூறியுள்ளார். இதனால் ஆச்சரியமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்களிக்க அனுமதியளித்தனர். அதன்படி வளைகாப்பு கோலத்தில் லட்சுமி பிரியா வரிசையில் நின்று தனது வாக்கைப்பதிவு செய்து ஜனநாயக உரிமையை நிறைவேற்றினார். இதைப்பார்த்து அங்கிருந்த வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.