ஈரோடு: தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆசனூர் மலைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள அரேப்பாளையம் மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பண்டிகையை கொண்டினார்.
பொங்கல்: பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்த அரேப்பாளையம் மலைவாழ் மக்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரேப்பாளையம் மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகை: பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்த மலைவாழ் மக்கள்
அப்போது அரேப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஒன்றுகூடி பெரியவர், சிறியவர் வரை பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம் காண்போர் கண்களை கவர்ந்தது. பெரும்பாலும் தமிழ்நாடு-கர்நாடக எல்லையை ஒட்டிய மலை கிராமங்களில் பொங்கல் விழாக்கள் பெரிய அளவில் கொண்டாடப்படாத நிலையில், இந்த மக்கள் தொடர்ந்து கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி காலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!