ஈரோடு:இந்து முன்னணி சார்பில் சென்னிமலைசுப்பிரமணிய சுவாமி கோயில் இருந்து பனிமலை கோயில் வரை வேல் யாத்திரை கொண்டு செல்லும் வகையில் வேல் வழிபாடு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதினங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயில், கொடி மரம் முன்பு முருகனின் வேலுக்குச் சிறப்பு பூஜைகள் செய்து திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர். இதையடுத்து சென்னிமலை கோவிலிருந்து வேல் யாத்திரை மூலம் பழனிமலை கோவிலுக்கு யாத்திரை சென்றனர்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் பேசுகையில் ”இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்கள் மூலம் 28 கோடி ரூபாய் அரசு வருமானம் ஈட்டி வருகிறது.கோயில் உண்டியலில் வருவதெல்லாம் குறைந்த அளவுதான். கோயில் சொத்துக்கள் மூலம் வரும் வருமானம்தான் மிகவும் அதிகம்.
8 மாதங்களில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்கள் மூலம் வந்த வாடகைப் பணம் பாக்கி மட்டும் 151 கோடி ரூபாய். அர்ச்சகர்கள் இல்லை என்றால், கோயில் சொத்துகள் சூறையாடப்படும். எந்த வேலையில் செய்யாத அதிகாரிகளுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம், எல்லா பணிகளையும் மேற்கொள்ளும் அர்ச்சகர்களுக்கு 4500 ரூபாய் சம்பளம்.
இந்து அறநிலையத்துறைக்கு என்று செத்து என்று ஏதும் கிடையாது, சைவ வைணவ கோயில் சொத்துக்கள் 4லட்சத்து 78ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்கள் இந்து அறநிலை துறைக்கு உள்ள நிலையில் தாங்கள் போடுவதாகத் தவறான தகவல்களை அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.