தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய கருத்துக் கேட்புக் கூட்டம் - வெளிமாநில செய்தியாளர்களால் ரகளை - ஈரோடு செய்திகள்

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சிட்கோ விரிவாக்கம் தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வெளிமாநில செய்தியாளர்கள் நுழைந்து கேள்விகள் எழுப்பியதால்,அச்சூழல் பரபரப்பாக மாறியது.

இருந்த வெளிமாநில செய்தியாளர்களை வெளியேற்றினர்
சிட்கோ ஆலை விரிவாக்கம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில்

By

Published : Oct 18, 2021, 11:06 PM IST

ஈரோடு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில்,பெருந்துறையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது, புதிதாக பெருந்துறை சிட்கோ மையத்தில் அமைக்க இருக்கும் ஆலை விரிவாக்கம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் ஆகும்.

ஆலை விரிவாக்கம் - வேண்டாம்

இதற்கு பொதுமக்கள் ஏற்கெனவே பெருத்துறை சுற்றுசூழல் மாசு அடைந்து நிலத்தடி நீரின் நிறம் மாறியுள்ளது எனவும்; இங்கு மக்கள் பலரும் புற்றுநோய் போன்ற தொற்று நோய்களால் அவதி அடைந்து வருகின்றார்கள் என்றும்;

இந்நிலையில், புதிதாக ஆலை விரிவாக்கப் பணிக்கு அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் பொதுமக்களிடம் புகார் எழுந்துள்ளது. இக்கூட்டத்தின் போது தெலங்கானா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நான்கு நபர்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, கேள்வி எழுப்பி உள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருந்த பெருந்துறை மற்றும் ஈங்கூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அந்த நான்கு பேரையும் மறித்து, ’நீங்கள் யார், என்ன விவரம்’ எனக் கேட்டு கூச்சலிட்டனர்.

ஈரோட்டில் மாசுக்கட்டு பாட்டு வாரியத்தின் பொதுமக்களுக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தின் போது

வெளிமாநில செய்தியாளர்கள்

அப்போது அவர்கள், தங்களை பத்திரிகையாளர்கள் என்று கூறினார்கள்; அண்டை மாநிலப் பத்திரிகையாளார்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் ஒரு சாதாரண சிட்கோ ஆலை விரிவாக்கம் தொடர்பான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் என்ன வேலை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பி அவர்களைத் தாக்க முற்பட்டனர்.

காவல் துறை சமாதானம்

பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் நான்கு பேரையும் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் அனைவரும் தாங்கள் செய்தியாளர்கள் என்று தங்களிடம் உள்ள அடையாள அட்டையைக் காட்டியுள்ளனர்.

இதற்கு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தமிழ்நாட்டில், வெளிமாநில செய்தியாளர்களுக்கு இங்கு என்ன வேலை.. என்று ஆவேசம் அடைந்தனர். இறுதியில் காவல் துறையினர் நான்கு பேரையும் பத்திரமாக மீட்டு, சில ஆலோசனைகளைத் திருப்பி அனுப்பினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 100 நாள் வேலைத்திட்டத்தால் விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை

ABOUT THE AUTHOR

...view details