தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவலர் திடீர் மரணம் - police personnel

ஈரோடு: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி என்பவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

Moorthy

By

Published : May 13, 2019, 11:57 AM IST

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி. இவர் சித்தோடு பகுதியை அடுத்துள்ள ஐ.ஆர்.டி.டி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். மொடக்குறிச்சி தொகுதி சேர்ந்த வாக்கு பெட்டிகள் இந்த கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை ஆய்வாளர் மூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த சக காவலர்கள் உடனடியாக மூர்த்தியை பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியிலேயே சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். எதிர்பாராமல் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர் மூர்த்தி மரணம்

ABOUT THE AUTHOR

...view details