ஈரோடு:பெருந்துறையில் காவல் துறையினர் இன்று (ஜூலை.11) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர், மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து இரண்டு மாநில எல்லையான பண்ணாரி, திம்பம், காராப்பள்ளம் ஆகிய சோதனைச் சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன. சந்தேகத்துக்குரிய கேரளா பதிவு எண் கொண்ட கார், மீண்டும் பண்ணாரி சோதனைச்சாவடியை கடந்தபோது காவல் துறையினர் நிற்பதைக் கண்டு கோவைக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.