ஈரோடு:பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் ஜீப் ஓட்டுநராக வேலுச்சாமி பணியாற்றி வந்தார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பங்களாப்புதூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் வேலுச்சாமிக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக விரக்தியில் இருந்தார்.
இந்நிலையில், குடும்பப் பிரச்னைக் காரணமாக இரு நாள்கள் விடுப்பும் எடுத்துள்ளார். இதனையடுத்து, கடம்பூர் மலைப்பகுதிக்குச் சென்று விட்டு கடம்பூர் மலைப்பாதை மல்லியம்தூர்க்கம் போன்பாறை என்ற இடத்தில் மலைச்சரிவில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், தற்கொலைக்கு முயன்ற வேலுச்சாமியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.